நேசம் - லா.ச.ராமாமிருதம்

_______________________________
நேசம்
(லா.ச.ராமாமிருதம்)
________________________________
       இத்தொகுப்பில் 11 சிறுகதைகள் உள்ளன.முதல் கதை "மேனகை " யில் மனம் பக்குவப்படாத நிலையில் விரதமும் கட்டுப்பாடும் செயற்கையானதே என்பதைக் கூறும் ஆசிரியர் ..
      "அப்பாவின் மீசை " கதையில் குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் சண்டை போட்டால் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் என்ற உளவியல் உண்மையை எடுத்துக்கூறுகிறார்.
        "நேசம் " கதையில் நாகம் தீண்டி மனைவி இறக்க ..அந்தச் சூழலில் அவளை வைத்ததற்குத் தானே பொறுப்பு என்று நினைத்து பிராயச்சித்தம் தேட முயலும் ஒரு தாத்தாவின் நிலை இக்கதை. 
      "வேள்வி " ஒருவர் மீது தோன்றும் வெறுப்பு இடம்மாறி வேறு திசையில் பாய்வதை கதை விளக்கும். 
       இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வேறுவேறு மாதிரி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
               (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்