47 நாட்கள் - சிவசங்கரி
_________________________________
47 நாட்கள்
(சிவசங்கரி)
__________________________________
மணமகனை (குமார்) சரியாக தேர்வு செய்யாததால் அவனை மணம் செய்த பெண் (விசாலி) அவனால் துன்பப்பட்டு 47 நாட்களில் அவள் திருமண வாழ்வு முடிகிறது.
குமார் - விசாலி திருமணம் முடிந்தவுடன் வெளி நாட்டிற்க்குக் கூட்டிச் செல்கிறான்.அங்கு அவனுக்கு ஏற்கனவே வெள்ளைக்காரியுடன் (லூசி) திருமணம் நடைபெற்றுள்ளது.குமார் விசாலியை தங்கை என்று எல்லோருக்கும் அறிமுகப் படுத்துகிறான்.உண்மையை சொன்னால் கஷ்டப்படுவாய் என பயமுறுத்துகிறான்.
அங்கிருந்து தப்பிக்க பல முயற்சி செய்கிறாள். அம்முயற்சிகள் எல்லாம் கணவனால் கண்டுபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகிறாள். பின்பு ஒரு டாக்டரின் உதவியுடன் தாய்வீடு வருகிறாள். 47 நாட்களும் நாமும் விசாலியுடனே பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
(விலை : ரூ 100)
(கங்கை புத்தக நிலையம்)
Comments
Post a Comment