பண்ணையார் மகள் - லட்சுமி
_______________________________
பண்ணையார் மகள்
(லட்சுமி)
________________________________
"ஆனந்த விகடன்" வார இதழில் தொடராக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட கதை.
அவலம், ஆனந்தம், அருவருப்பு எனப் பல்வேறு உணர்வுகளை கற்பனை வளத்தோடு, இலக்கியத்தின் வாயிலாக மக்களுக்கு உணர்த்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி அவர்கள்.
தந்தையிடம் பிரிந்து தாயால் வளர்க்கப்படும் உமா, தாயின் மறைவுக்குப்பின் அவளின் விருப்பத்தின் பேரில் தந்தையிடம் செல்கிறாள்.தந்தை அழகர்நத்தம் பண்ணையார்.
அவள் சென்ற சில தினங்களிலேயே தந்தையும் இறந்துவிட பண்ணையின் தலைவியாகிறாள்.பண்ணை மேலாளர், அவர் மகன் மூலம் வரும் தொல்லைகளை சமாளித்து தனக்கு பல வழிகளில் உதவியாக இருந்த, தன்மீது அன்பு கொண்ட சிவக்குமாரை மணந்து மகிழ்கிறாள்.
காலத்தால் குன்றாத, இளமை மங்காத, கற்பனை நயம் மிக்க கதை.
(விலை : ரூ 165)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment