வாழ்வியல் சிந்தனைகள்தொகுதி - 5 - கி.வீரமணி
_________________________________
வாழ்வியல் சிந்தனைகள்
தொகுதி - 5
(கி.வீரமணி)
_________________________________
ஆசிரியர் விடுதலை நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
4 ன் தொடர்ச்சியாக வெளிவந்த 5 ஆவது தொகுப்பு இந்நூல்.
"நோயற்ற வாழ்வுக்கு " முதல் "இதய நோய் பலவிதம் : ஒவ்வொன்றும் ஒருவிதம் "ஈறாக 75 கட்டுரைகளின் தொகுப்பு.
பட்ஜெட் போட்டு வாழ வேண்டியதன் அவசியம்..சிறு சிறு அலட்சியங்கள், பெரு நட்டமாவது...அறிவியல் மனப்பான்மை பெருக வேண்டியதன் அவசியம் ..தூக்கம் மருந்தில்லா மருந்து ..தோல்வி என்னும் பேராசான் நம் நண்பன் தான்...போன்ற எண்ணற்ற செய்திகளின் கருத்து களஞ்சியம் இந்நூல்.
"நூலைப்படி
தொடங்குகையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப் படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி
நூலைப்படி "
(விலை : ரூ 75)
(பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)
Comments
Post a Comment