அத்தை - லட்சுமி
_______________________________
அத்தை
(லட்சுமி)
________________________________
தான் விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள அண்ணன் (மயூரவாகன்) தடை விதித்ததால், அவர் சொல் கேளாமல் விரும்பியவரையே மணம் செய்து கொண்டு குஜராத்தில் குடியேறுகிறாள் நீலாவதி.
திருமணமான இரண்டு வருடங்களிலேயே கணவன் இறந்துவிடுகிறான். தான் கௌரமாக வாழும் பொருட்டு ஒரு ஆசிரமத் தலைவியின் உதவியுடன் குஜராத் குடும்பத்தில் பணிப்பெண்ணாகிறாள்.
சுமார் 40 வருடம் கழித்து தன் எஜமானியுடன் சென்னை வரும் அவள், தன் வீட்டு விசயங்களைத் தெரிந்து கொள்கிறாள்.தன் அண்ணன் மகளும் (கன்யா) ஒரு ஏழையை மணக்க விருப்பம் கொள்ள, அண்ணி உதவியுடன் திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.அண்ணன் சுயநினைவின்றி உள்ளார்.
தன் உறவினர்கள் கூறியதைக் கேட்காமல் மீண்டும் தன் எஜமானியுடன் வெளிநாடு செல்கிறாள்.கதை இத்துடன் நிறைவடையும்.
பெரியவர்களின் பேச்சைக் கேளாமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார் லட்சுமி அவர்கள்.
(விலை : ரூ 95)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment