அலை ஓசை - கல்கி
அலை ஓசை
(கல்கி)
_________________________________
இந்நூல் நான்கு பாகங்களைக் (பூகம்பம், புயல், எரிமலை, பிரளயம்)
கொண்டது.இக்கதை சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்தது.
சுதந்திரத்துடன் வந்த பிரிவினையில் பொது மக்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது.
நாயகன், நாயகி, வில்லன் என்ற மும்முனைப் போக்கு இப்புதினத்தில் இல்லை..இதுவே இதன் தனிச்சிறப்பு..
அவரவர் குண இயல்புக்கு ஏற்ப ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
லலிதாவும், சீதாவும், தாரணியும், சௌந்தரராகவனும், பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும், உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு "அலை ஓசை "யை எழுதியிருக்கிறார்களோ என்ற ஒரு மாயையை (பிரம்மையை) வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்..
மிக அற்புதமான புதினம்..
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது..
வாசியுங்கள்!!
வாழ்வை வளப்படுத்துங்கள்!!
(விலை : ரூ 550)
(சாரதா பதிப்பகம்)
Comments
Post a Comment