நினைவு அலைகள் - நெ.து.சுந்தரவடிவேலு
நினைவு அலைகள்
(நெ.து.சுந்தரவடிவேலு)
__________
நெ.து.சு.அவர்கள் சிறந்த கல்விச் சிந்தனையாளர்.சாமான்ய மக்களுக்கும் கல்விக் கண்கொடுத்து கரையேற்றி வாழ்வளிக்க வேண்டும் என்ற தொண்டுள்ளத்தோடு பணியாற்றிய பெருந்தகை.
ஆசிரியர் தம் வாழ்க்கை வரலாற்றை, தம் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை, உலகைப் பலமுறை வலம் வந்து பெற்ற அனுபவங்களை, தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களை, தலைவர்கள் பற்றியெல்லாம் "சத்ய கங்கை " பத்திரிகையில் "நினைவு அலைகள் " என்ற தலைப்பில் எழுதினார்கள்.அதன் தொகுப்பே இந்நூல்.
இந்நூல் நெ.து.சு அவர்களின் தன் வரலாறு மட்டுமல்ல..தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அத்தனையும் அடங்கிய தகவல் களஞ்சியம் ..மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.
(வானதி பதிப்பகம்)
Comments
Post a Comment