பாரதிதாசன் - முருகு சுந்தரம்
பாரதிதாசன்
(முருகு சுந்தரம்)
_____________________________
பாரதிதாசனாரின் பெருமையினை விவரிக்கும் நூல் இது.
கல்வியும் ஆசிரியப் பணியும், பாரதியும் தாசனும், தேசியக்கவி, புரட்சிக் கவி, தமிழ் மறவர், இயற்கை கவிஞர், மனித நேயர், பெண்ணுரிமை பேணியவர், திரைப்பட நாடக எழுத்தாளர், இதழாசிரியர் என்ற தலைப்புகளில் அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு அவர் எழுதிய நூல்களிலிருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழின் சிறப்பு, வளம், இன்றைய நிலை, அதை முன்னேற்றும் வழிமுறைகள் இவற்றை ஆய்ந்து முதன்முதலாக கவிதை நூலாக (தமிழியக்கம்) எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும்.
பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு, பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோளுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ஒப்பற்ற கவிஞனின் புகழ்பாடும் இந்நூலை எல்லோரும் வாசிப்போம்.
(விலை : ரூ 25)
(சாகித்ய அகாதெமி பதிப்பு)
Comments
Post a Comment