அகம் புறம் - வண்ணதாசன்

அகம் புறம்
(வண்ணதாசன்)
___________
        வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
      நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது.
       இந்த நூலில் ஆசிரியர் தாம் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள், அன்றாட நடக்கும் நிகழ்வுகள், அவற்றை தாம் கண்ட கோலம் என்று பலதரப்பட்ட சுவாரசிய வண்ணங்களை எழுத்துத் தூரிகையால் காவிய..ஓவியமாக்கி உள்ளார் ..
       ஊன்றிப் படிக்கத் தோன்றும் நெல்லை மண் வாசனையோடு, எழில் நடையால், கிராமியத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள் வாசிப்பவரை கவர்ந்திழுக்கும் வல்லன்மை கொண்டவை.
                  (விலை : ரூ 125)
                  (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்