மகேந்திரவர்மன் - மயிலை.சீனி.வேங்கடசாமி
மகேந்திரவர்மன்
(மயிலை.சீனி.வேங்கடசாமி)
______________________________
ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையானதாகும்.ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது.
ஏறத்தாழ கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவ அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் அரசாண்டு வந்தனர்.
மகேந்திரவர்மன் வாழ்ந்த காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் பேரும் புகழும் படைத்த அரசனாக மட்டும் வாழவில்லை.சிற்பம், ஓவியம், காவியம், இசை முதலிய நற்கலைகளைக் கற்ற கலைச் செல்வனாக விளங்கினான்.
முதன்முதலாக தமிழ்நாட்டில் குகைக்கோயில்கள் அமைத்தவன்."மத்தவிலாசப் பிரஹசனம் " என்னும் நாடக நூலை எழுதியவன்."குணபரன், சித்ரகாரப்புலி, விசித்ரசித்தன் " இன்னும் 30 க்கும் மேற்பட்ட சிறப்புப் பெயர்களைப் பெற்றவன்.இவன் அளித்த கலைச்செல்வங்கள் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இவன் புகழ்பாடுகின்றன.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வரசனைப் பற்றியும், இவன் காலத்து நிகழ்வுகள் பற்றியும்,இவன் அமைத்த குகைக் கோயில் முதலிய கலைகளைப் பற்றியும் இந்நூலில் ஆராயப்படுகிறது.அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.
(விலை : ரூ 50)
(நாம் தமிழர் பதிப்பகம்)
Comments
Post a Comment