மாமிசப்படைப்பு - நாஞ்சில் நாடன்
மாமிசப்படைப்பு
(நாஞ்சில் நாடன்)
__________________________
இருநூறு குடும்பங்கள் வாழும் மாங்கோணத்தில் 2,3 நிலக்கிழார்களின் ஆதிக்கம்.. அவர்களை அண்டி வாழ்கின்ற பல்வேறு குடும்பங்கள்..
மழை பெய்வதற்கும், பயிர் விளைவதற்கும் ஆதாரமாய் இருப்பவை, சில தெய்வங்கள்தான் என நம்புதல்..அவற்றிற்கு எடுக்கப்படும் விழாக்கள்..அதன் பொருட்டு உருவாகும் வன்மங்கள் ..குரோதங்கள் என்ற ரீதியில் கதை துவங்கி நகர்ந்து முடிகிறது இந்த குறும்புதினம்.
மிராசு கடுவாய் சுந்தரத்திற்கும், நேர்மையான கந்தையாவுக்கும் நடக்கும் அகப்போரில் கந்தையா படைப்புதான் மையக்கோடு.
கதாப்பாத்திரகளின் அறிமுகமும், உரையாடல்களும் மனதைத் தொடும்.வேளாண் தொழிலோடு மக்களின் வாழ்வியலையும் மிக அழகாகப் பின்னியுள்ளார் ஆசிரியர்.
(விலை : ரூ 120)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment