மின்னல் மழை மோகினி - ஜாவர் சீதாராமன்
மின்னல் மழை மோகினி
(ஜாவர் சீதாராமன்)
________________________________
மழைக்காலத்தில், மலையாளத்து மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில், தாயை இழந்து அந்தப் பகுதியில் வாழும் நாராயணியம்மாள் வீட்டுக்கதவை தட்டும் நான்கு வயதான குழந்தை மோகினி..
மோகினியை தன் பெண்ணென வளர்க்கும் நாராயணி அம்மாள்..
தன் சந்ததியினர் செல்வமுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் தீய வழியில் பொருள் சேர்க்கும் வெங்கடபதி..மகன் ராஜீ..மருமகள் விஜயா, பேத்தி கௌரி, அண்ணனுக்காக சிறை செல்லும் அழகிரிசாமி...
என்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களின் மூலம் பின்னப்பட்ட அருமையான கதை.
இயற்கையான மின்னல், மழை தோன்றும் போதெல்லாம் மோகினியின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த ஒவ்வொரு கட்டத்திலும் நாமே அந்த மின்னல் மழையை அனுபவிப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.
அடுத்து என்ன? என்ன? என்று ஒவ்வொரு பக்கத்திலும் சம்பவங்களைத் தீட்டியிருப்பது வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
(விலை : ரூ 210)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment