வெற்றிகள் விற்பனைக்கு அல்ல - நா.சங்கரராமன்
வெற்றிகள் விற்பனைக்கு அல்ல
(நா.சங்கரராமன்)
_______________________________
கருத்துப் பெட்டகமாய் அமையும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில், இயல்பாய் நம்முடன் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது இந்நூல்.
எடுத்த உடனே.."நிராகரிப்பை நிராகரியுங்கள் " என்ற தலைப்பே சாட்டை அடியாய் நம்மை உறுத்துபவைகளைத் துடைத்தெறிகின்றது.
14 தலைப்புகளில் அருமையாக உண்மைச் சம்பவங்களைக் கூறி மனதைப் பக்குவப்படுத்தி தோழமையோடு வெற்றியின் படிக்கட்டில் அமர வைக்கும் முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் மட்டுமல்ல..அனைவர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்..
(விலை : ரூ 60)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment