எப்போதும் இன்புற்றிருக்க
தினம் ஒரு புத்தகம்
_______________________________
எப்போதும் இன்புற்றிருக்க...
(வெ.இறையன்பு)
________________________________
ஆசிரியர் தன்னுடைய அனுபவங்களையும், தாம் வாசித்த மனிதர்களின் வாழ்க்கையையும் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
"நிரந்தரமாகுமா நிம்மதி "முதல் "நுகர்வதும், பகிர்வதும்! " ஈறாக 26 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
மகிழ்ச்சி என்பது, நம்மை நாம் புரிந்து கொள்வதிலும், அடுத்தவர்களுக்கு நிரூபிக்க நினைக்காமல் இயல்பாய் வாழ்வதிலும் அமைந்திருக்கிறது என்பதுதான் அதற்கான முதல்படி.
"எப்போதும் இன்புற்றிருப்பது " என்பதை கைக்கொள்வதற்கு இயல்பாக, எளிமையாக, சாதாரணமாக இருந்தால் போதும் ; அது தானாகவே கைக்கூடும்.
மனிதனின் மகிழ்ச்சி பகிர்தலில் உள்ளது.எல்லோரிடமும் அன்புடனும், பரிவுடனும் பரிமாறிக் கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து என்பதை உணர வைக்கும் நூல்..
இது வெறும் புத்தகமல்ல;
உண்மையான ஓர் இதயம்..!
(விலை : ரூ 150)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment