கங்கையும் வந்தாள்
தினம் ஒரு புத்தகம்
_____________________________
கங்கையும் வந்தாள்
(லட்சுமி)
_____________________________
இந்தப் புதினத்தின் நாயகி "கங்கா "பொறுமையில் பூமியையும், சகிப்புத்தன்மையில் கங்கையையும் ஒத்தே விளங்குகிறாள்.
பம்பாயிலிருந்து, "நரேந்திரன் " நம்பி வந்த ரத்னசாமி வைரப் பிள்ளையார் விசயத்தில் ஏமாற்றினாலும், அவர் மகள் கங்காவின் அன்பை அடைய காரணமாகிறார்.
கங்காவை மணந்து கொண்டு, தான் ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் அவளை பழி வாங்குகிறான்.அவள் அவனை விட்டு விலகிச் செல்கிறாள்.
என்றாலும், தன் கணவன் தலையில் அடிபட்டுக்கிடக்கிறான் என்பதை அறிந்து, அவன் நலம் பெற துணையாய் இருக்கிறாள்.மீண்டும் பிரிய நினைக்கிறாள்.
தனக்கு ஆதரவு தந்த சிவகாமி அம்மாவின் சொல் கேட்டு, நரேந்திரனை மன்னித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.இப்புதினத்தில் இவர்கள் இருவருடன் ஏனைய பாத்திரங்கள் அனைவருமே என்றென்றும் நம் நெஞ்சில் நிழலாடக் கூடியவர்கள்.
(விலை : ரூ 160)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment