வாழ்வியல் சிந்தனைகள்.. தொகுதி.14 - கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள்..
தொகுதி..14
(கி.வீரமணி)
______________________________
ஆசிரியர் அவர்கள், அவ்வப்போது சிந்தனையில் தோன்றும் சிறந்த எண்ணங்களை விடுதலை நாளிதழில் பதிவு செய்வதுண்டு.
அவ்வாறு எழுதப்பட்ட குறிப்புகள் 13 தொகுதிகளாக வெளிவந்து அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தது.பயனுள்ளதாக இருந்தது.இது 14 வது தொகுதி.இதில் 75 கட்டுரைகள் உள்ளன.
பெரியார் - மணியம்மையார் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் தாம் வாங்கிய அரிய நூல்கள், நெல்சன் மண்டேலாவின் சிறந்த கடிதங்கள் போன்ற பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
100 ஆண்டுகள் வாழ்வது குறித்தும், நெஞ்சுவலி நிவாரணத்திற்கான மாத்திரையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்நூலில் விவரித்து தந்து இருக்கிறார் ஆசிரியர்.
(விலை : ரூ 200)
(சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)
Comments
Post a Comment