சந்திரவதனா (எஸ்.பாலசுப்ரமணியன்)

 சந்திரவதனா

(எஸ்.பாலசுப்ரமணியன்)

___________

       1998 ல் வெளிவந்த புதினம்.கி.பி 17ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது.

      தஞ்சையை ஆண்ட விஜயராக நாயக்கர் என்னும் மன்னனின் மகள் " சந்திரவதனா " கதை நாயகி.

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கன் கதையின் நாயகன்.

      அக்காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை கதையில் நேரடியாகக் காட்டியதோடு அவற்றிற்கான புத்தகச் சான்றுகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

       இடையிடையே வரும் வேதங்கள் தொடர்பான தருக்கங்கள், சாத்திரங்கள் பற்றிய முழுமையான எளிமையான விளக்கம் சிறப்பு.

      கதைப்படித்து முடித்தவுடன் குறைந்தது ஒரு வாரத்திற்கு கனத்த மனதுடன் இருப்பது.. வாசிக்கும் போது அந்த காலத்திற்கே சென்றுவிடுவது போன்ற உணர்வு..வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை இவையெல்லாம் இக்கதையின் சிறப்பு..

              (நான்கு தொகுதிகள்)  

              (கலைஞன் பதிப்பகம்)

Comments